பிரதமர் நரேந்திர மோடி தமிழகத்திற்கு வந்த நிலையில் அவரை சந்திக்க ஓ.பன்னீர் செல்வம் அனுமதி கேட்டிருந்தார். ஆனால் ஓபிஎஸ்க்கு அனுமதி தரப்படவில்லை என்று கூறப்பட்டது. மேலும் அதிமுக கூட்டணியில் அதிமுகவை சேர்க்க வாய்ப்பு இருந்தாலும் ஓபிஎஸ்சை சேர்க்க வாய்ப்பு இல்லை என்று எடப்பாடி திட்டவட்டமாக கூறிவிட்டார். இதனைத்தொடர்ந்து ஓபிஎஸ் பாஜகவை கண்டித்து அறிக்கை வெளியிட்டார்.
இதற்கிடையில், விஜய்யின் தவெகவுடன் அவர் கூட்டணி வைக்க பண்ருட்டி ராமச்சந்திரன் அட்வைஸ் கொடுத்தார். இன்று தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை செய்த பிறகு தமிழக வெற்றிக் கழகத்துடன் கூட்டணி அமைப்பது குறித்து ஓபிஎஸ் அதிகாரப்பூர்வமாக அறிவிக்க உள்ளார். இதனால் யாருடன் கூட்டணி வைக்க போகிறார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இதற்கிடையில் நேற்று காலை வாக்கிங் சென்றபோது ஸ்டாலினை ஓபிஎஸ் சந்தித்து பேசினார்.
அதன்பின் பாஜக கூட்டணியில் இருந்து விலகுவதாக அறிவித்த கொஞ்ச நேரத்தில் ஸ்டாலினின் இல்லத்திற்கே சென்று இரண்டாவது முறையாக சந்தித்தார். ஆனால், அரசியல் ரீதியாக எதுவும் பேசவில்லை என்று சொல்லப்பட்டது. முதல்வர் இந்நிலையில், இன்று அதிகாலை வாக்கிங் சென்றபோது ஸ்டாலினை 3-வது முறையாக OPS சந்தித்துள்ளார். இதனால் அரசியல் ரீதியான சந்திப்பாக இருக்குமோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
