தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அனைத்து கட்சிகளும் தீவிரமாக தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகின்றன. தமிழகத்தில் மீண்டும் எப்படியாவது ஆட்சியைப் பிடித்து விட வேண்டும் என்று திமுக தலைமை ஒரு பக்கம் சிந்தித்து கொண்டு இருக்க மறுப்பக்கம் எடப்பாடி பழனிச்சாமி அதிமுக ஆட்சியை மீண்டும் கொண்டு வருவதற்கான வேலைகளை செய்து வருகின்றார். இவர்களுக்கு இடையே தமிழக வெற்றி கழகம் தலைவர் விஜய் புதிய ஆட்சியை மக்களுக்கு கொடுக்க வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளார். என்னதான் மற்ற கட்சிகள் போட்டி போட்டுக் கொண்டிருந்தாலும் திமுகவின் கூட்டணி என்பது பலமாக உள்ளது. அதனால் மீண்டும் திமுக ஆட்சி தான் அமையும் என்ற நம்பிக்கையில் முதல்வர் ஸ்டாலின் உள்ளார்.
இப்படியான நிலையில் 2026 தேர்தலில் மதிமுகவின் இடத்தில் தேமுதிகவை கொண்டுவர திமுக வியூகம் வகுத்து வருவதாக தகவல் கசிந்து உள்ளது. தேமுதிக கூட்டணி முடிவு குறித்து வாய் திறக்காமல் இருக்கும் அதே வேளையில் சமீப காலமாக திமுகவை விமர்சிப்பதை நிறுத்திவிட்டது. அதே நேரம் மதிமுக மற்றும் திமுக இடையிலான உறவில் சிக்கல் இருந்து வருகிறது. துரை வைகோ பாஜகவுடன் மறைமுக கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தியதே இதற்கு காரணம் என்றும் சொல்லப்படுகிறது.
