இன்னும் சற்று நேரத்தில்… 21 மாவட்டங்களில் ருத்ர தாண்டவம் ஆடப்போகும் மழை… வானிலை ஆய்வு மையம் அலர்ட்…!

By Nanthini on ஆடி 31, 2025

Spread the love

தமிழகத்தில் இன்றும் நாளையும் பரவலாக மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. ஓரிரு இடங்களில் பலத்த தரைக்காற்று மணிக்கு 50 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என்றும் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், தஞ்சாவூர், மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், நாகப்பட்டினம் உள்ளிட்ட 21 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தகவல் தெரிவித்துள்ளது.

இன்று முதல் அடுத்த ஐந்து நாட்களுக்கு தமிழகத்தில் பரவலாக மழை பெய்யும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்களில் ஒரு வாரமாக மழை பெய்து வரும் நிலையில் தமிழகத்திற்கு தற்போது கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.