பாளையங்கோட்டை கேடிசி நகரில் வசித்து வருபவர் சரவணன். இவருடைய மனைவி கிருஷ்ணகுமாரி இருவரும் சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வருகிறார்கள். இவர்களுக்கு சுர்ஜித் என்ற 24 வயது மகனும், ஒரு மகளும் உள்ளார்கள். இவருடைய மகளும் ஆறுமுகமங்கலம் பகுதியைச் சேர்ந்த விவசாயியின் மகனான கவின் குமாரும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. கவின் சென்னையில் சாப்ட்வேர் இன்ஜினியராக வேலை பார்த்து வந்த நிலையில் கவின் சொந்த ஊருக்கு வந்துள்ளார். அப்போது அந்த பெண்ணை அடிக்கடி சந்தித்துள்ளார். வீட்டில் இந்த விஷயம் தெரிந்ததால் கவின்குமார் பழங்குடியினர் சமூகம் என்பதால் பெண் வீட்டார் இந்த பழக்கத்திற்கு மறுப்பு தெரிவித்துளர்கள்.
இதனைத்தொடர்ந்து ஆத்திரத்தில் பெண்ணின் சகோதரர் சுர்ஜித் கவின் குமாரை பேச அழைத்து தான் மறைத்திருந்த வைத்திருந்த அரிவாளால் சரமாரியாக வெட்டி கொலை செய்துவிட்டார். தற்போது சுர்ஜித்தை கைது செய்த நிலையில் அவருடைய தந்தை சரவணனையும் கைது செய்துள்ளது காவல்துறை. ஆனால் சுர்ஜித்தின் தாயையும் கைது செய்தால் தான் சுர்ஜித் உடலை வாங்குவோம் என்று கவினின் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்நிலையில் கவினின் காதலி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “நானும் கவினும் உண்மையாக காதலிச்சோம்.
கொஞ்சம் செட்டில் ஆக நேரம் தேவைப்பட்டது. மே 30 அன்று சுர்ஜித்தும், கவினும் பேசிக்கிட்டாங்க. பின்பு சுர்ஜித் அப்பாகிட்ட சொல்லிட்டான். அப்பா என்கிட்ட இதுபற்றி கேட்டபோது இல்ல அப்பான்னு சொல்லிட்டேன். ஏன்னா கவின் என்கிட்ட இன்னும் ஒரு 6 மாதத்தில் சொல்லுன்னு டைம் கேட்டிருந்தான். அதுனால அப்பாகிட்ட சொல்லல. அதற்குள் சுர்ஜித் கவினை என்னை பெண் பார்க்க வரச்சொல்லி அழைத்துள்ளான். சம்பவத்தன்று என்ன நடந்ததுன்னு எனக்கு தெரியாது. நான் 28 ஆம் தேதி மாலையில் தான் வர சொல்லியிருந்தேன். அவங்க தாத்தாவுக்கு உடம்பு சரியில்லைன்னு கூட்டிட்டு வந்திருக்காங்க. வந்துட்டு தான் எனக்கு சொன்னாங்க.
எனக்கும் கவினுக்கும் நடந்தது எங்களுக்கு மட்டுமே தெரியும்,
எங்களை பற்றி இனி யாரும் தவராக பேச வேண்டாம்,
இந்த கொலைக்கும் என் தாய் தந்தைக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை.
சுபாஷினி வீடியோ வெளியீடு#JusticeForKavin #JusticeForKavinkumar #Kavin #KavinCase pic.twitter.com/4ckiB9B6es
— Aadhi Shiva (@aadhi_shiva1718) July 31, 2025
நான் அவங்க அம்மா, தாத்தாவை மருத்துவமனைக்கு கூட்டிட்டு போயிட்டு அவங்ககிட்ட தான் பேசிட்டு இருந்தேன். ஆனா கவின் கிளம்பி வெளியே போயிட்டான். அவங்க அம்மா கவினுக்கு கால் பண்ணினாங்க அவன் எடுக்கல. அதனால் நான் நீங்க சாப்பிட போங்க நான் வர சொல்றேன்னு சொன்னேன். அதுக்குள்ள இப்படி ஆகிடுச்சு. இதை தேவையில்லாம யாரும் வதந்தி கிளப்பி வேண்டாம். உங்களுக்கு தோணுறதை பேசாதீங்க. எங்க அப்பா அம்மாவுக்கு இதுபத்தி தெரியாது. இதோட இதை விட்ருங்க விட்ருங்க அவ்ளோதான் என பேசியுள்ளார்.
