“எம்ஜிஆர் காலம் வேறு, இது வேறு”… விஜய் எனக்கு எப்பவும் தம்பிதான்… அரசியல் கத்துக்குட்டிக்கு குஷ்பு கொடுத்த அட்வைஸ்..!

By Nanthini on ஆடி 31, 2025

Spread the love

தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் நிலையில் அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வருகின்றன. மீண்டும் தமிழகத்தில் திமுக ஆட்சி தான் அமையும் என்ற நிலைப்பாடோடு முதல்வர் ஸ்டாலின் அதற்கான வேலைகளை செய்து கொண்டிருக்க மறுப்பக்கம் பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ள அதிமுகவை தமிழகத்தில் நிலைநாட்ட வேண்டும் என்ற இபிஎஸ் அதற்கான வேலைகளை செய்து கொண்டிருக்கின்றார். ஆனால் தமிழகத்தில் கூட்டணி ஆட்சி தான் அமையும் என்ற நிலைப்பாடோடு பாஜக உள்ளது.

இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க மறுப்பக்கம் தமிழக மக்களுக்கு விடியலை தர வேண்டும் என்று தமிழக வெற்றி கழகம் தலைவர் விஜய் சிந்தித்து செயலாற்றி வருகின்றார். அதேசமயம் தொடர்ந்து பாஜக மற்றும் திமுக அரசை விஜய் விமர்சித்து வருகின்றார். இப்படியான நிலையில் பாஜகவின் மாநில துணைத்தலைவராக நடிகை குஷ்பூ நியமிக்கப்பட்டுள்ளார். இதனிடையே இது குறித்து பேட்டியளித்த குஷ்புவிடம், பாஜகவை கொள்கை எதிரி என விஜய் கூறுகிறாரே என கேட்டதற்கு விஜய்யை எப்போதும் தான் தம்பி என்று தான் அழைப்பதாகவும், அரசியல் ரீதியாக அவர் வேறு இடத்தில் இருந்தாலும் அவருக்கு வாழ்த்துக்கள் என்று தெரிவித்துள்ளார்.

   

அவர் தற்போதுதான் அரசியலுக்குள் அடியெடுத்து வைத்துள்ளார். அரசியலுக்கு வந்த உடனேயே வெற்றி கிடைக்காது. விஜய்க்கு அது நன்றாகத் தெரியும். வெளியே இருந்தபடி அது சரியில்லை, இது சரியில்லை என்று சொல்லாமல் விஜய் இறங்கி வேலைப் பார்க்கிறார், அது நல்லதுதான்.  மேலும் வரும் தேர்தலில் அவர் வெற்றி பெறுவாரா என்பதை மக்கள் தான் முடிவு செய்வார்கள். எம்.ஜிஆர், கருணாநிதி, ஜெயலலிதா காலம் வேறு, ஆனால் இப்போதைய காலம் வேறு மாதிரியாக உள்ளது. அந்த காலங்களில் மக்கள் மனநிலை வேறு மாதிரி இருந்தது, இப்போது மக்களின் மனநிலை வேறு மாதிரி உள்ளது எனவும் குஷ்பு தெரிவித்தார்.