அவர்களின் அதிகாரபலத்தை உடைத்து… 1967, 1977 தேர்தல்கள் போல 2026இல்… TVK செயலி அறிமுக விழாவில் விஜய் சூளுரை…!

By Soundarya on ஆடி 30, 2025

Spread the love

தமிழக வெற்றிக் கழகத்தில் 2 கோடி உறுப்பினர்கள் இலக்குடன், 2-ம் கட்ட உறுப்பினர் சேர்க்கைக்கான ‘MY TVK’ செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.  இந்த செயலியை தவெக தலைவர் விஜய் கொள்கை தலைவர்களை வணங்கி தொண்டர்களுக்கு அறிமுகம் செய்து வைத்துள்ளார். இந்த செயலியில் அனைத்து தொகுதிகளின் வாக்காளர்கள் பட்டியலும் இணைக்கப்பட்டுள்ளது. அதை பயன்படுத்தி தவெக நிர்வாகிகள் ஒவ்வொரு இல்லத்திற்கும் சென்று உறுப்பினர் சேர்க்கையில் ஈடுபட உத்தரவிடப்பட்டுள்ளது.

`My TVK’ செயலியை அறிமுகம் செய்து தவெக-வின் 2ம் கட்ட உறுப்பினர் சேர்க்கையை தொடங்கி வைத்தார் விஜய். செயலியில் ஒரு தொலைபேசி எண்ணை பயன்படுத்தி 5 பேரை சேர்க்கலாம். பொதுமக்களை தவெக உறுப்பினர்களாக சேர்ப்பதற்கு எந்த ஒரு OTP-யும் கேட்கபடாது. இந்நிலையில் இந்த நிகழ்ச்சியில் பேசிய அவர், ” தொடர்ந்து வெற்றி பெற்றவர்களின் அதிகார பலத்தை உடைத்து 1967, 1977 தேர்தல்களில் புதியவர்கள் ஆட்சிக்கு வந்தார்கள்,அது போல, 2026 தேர்தலும் அமையும். மதுரை மாநாடு, மக்கள் சந்திப்பு என மக்களோடு மக்களாக இருக்க போகிறோம்” என்று கூறியுள்ளார்.