சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஜூலை 30) சவரனுக்கு ரூ.480 அதிகரித்துள்ளது. இதனால், 22 கேரட் தங்கம் 1 கிராம் ரூ.9,210-க்கும், சவரன் ரூ.73,680-க்கும் விற்பனையாகிறது. கடந்த 6 நாள்களாக குறைந்து வந்த தங்கம் இன்று திடீரென ரூ.480 அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதனால் இல்லத்தரசிகள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
