வீட்டிலே தனிமையில் இருந்த 16 வயது சிறுமி… உள்ளே நுழைந்த வடமாநில நபர்… சென்னையில் நடந்த பயங்கரம்…!

By Nanthini on ஆடி 29, 2025

Spread the love

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பல்வேறு மாவட்டங்களிலும் தொடர்ந்து பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. இது தொடர்பாக அரசு என்னதான் கடுமையான சட்டங்களை கொண்டு வந்தாலும் சில காம கொடூரர்கள் இதுபோன்ற செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்கள். இப்படியான நிலையில் சென்னை சூளைமேடு பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பில் தேனீக்கள் கூடு கட்டி இருந்தன. அதனை அகற்றுவதற்காக வடமாநில வாலிபர் ஒருவரை அழைத்துச் சென்றுள்ளனர்.

தேன் கூடுகளை அகற்றுவதற்காக சென்ற அந்த நபர் அடுக்குமாடி குடியிருப்பில் தனியாக இருந்த 16 வயது சிறுமியிடம் பாலியல் அத்துமிரலில் ஈடுபட்டுள்ளார். இதனால் ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த அந்த சிறுமி கூச்சலிட்ட நிலையில் உடனடியாக அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் சிறுமியை மீட்டு உடனே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட அந்த வாலிபரை பிடித்து கைது செய்தனர். அவர் மீது போக்சோ வழக்கு பதியப்பட்டுள்ள நிலையில் போலீசார் சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.