இனி கழிப்பறை சுத்தமா இருக்கும்.. “10 நிமிட இடைவெளியில்” ரயில் பயணிகளுக்கு வெளியான சூப்பர் குட் நியூஸ்..!!

By Soundarya on ஆடி 28, 2025

Spread the love

ரயில்களில் நீண்ட தூரம் செல்லும்போது கழிப்பறைகள் முறையாக சுத்தம் செய்யப்படுவதில்லை என்று புகார் எழுந்து வருகிறது. தண்ணீர் குழாய்கள் உடைந்திருப்பது, போதிய தண்ணீர் நிரப்பாது போன்ற காரணத்தால் கழிப்பறைகள் பல நேரங்களில் அசுத்தமாகவே இருக்கிறது. இந்த நிலையில் 10 நிமிடம் அல்லது நிறுத்தப்படும் நிலையங்களில் ரயில் கழிப்பறைகளை கட்டாயமாக சுத்தம் செய்ய வேண்டும் என்று ரயில்வே நிர்வாகம் உத்தரவிட்டது. நிலையங்களை தவிர கழிப்பறையை சுத்தம் செய்ய வேறு புதிய இடங்களையும் பரிந்துரைக்கலாம். இது குறித்து ரயில்வே தலைமை எந்திரவியல் பொறியாளரே முடிவு செய்யலாம்.

அதுபோல ஒவ்வொரு ரயிலுக்கும் அடையாளம் காணப்பட்ட ரயில் நிலைய இடங்களில் விவரங்களை தொகுத்து 31ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளது . குறிப்பிட்ட நிலையங்களில் ரயில்கள் நிற்கும் பொழுது ரயில் கழிப்பறைகளை தூய்மைப்படுத்தும் நோக்கத்தில் சுத்தமான ரயில் நிலையம் என்ற திட்டத்தை இந்திய ரயில்வே கடந்த 2003 ஆம் வருடம் அறிமுகம் செய்தது குறிப்பிடத்தக்கது. இந்த திட்டம் படிப்படியாக பல ரயில் நிலையங்களிலும் அமல்படுத்தப்பட்டது.