டெல்லியில் ஒரு பள்ளியில் சக மாணவனால் 14 வயது சிறுவன் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த மாதம் 24 ஆம் தேதி அன்று நடந்த இந்த சம்பவத்தில் பள்ளியின் கழிப்பறையில் 14 வயது சிறுவன் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாக கூறப்படுகிறது. தொடர்ந்து அந்த மாணவருக்கு பிறப்புறுப்பில் வலி இருந்து வந்துள்ளது. இதனை கவனித்த பெற்றோர் மாணவனிடம் கேட்டபோது அவர் தனக்கு நேர்ந்த கொடுமையை விவரித்துள்ளார். இதனையடுத்து அதிர்ச்சி அடைந்த பெற்றோர் போலீசில் புகார் அளித்துள்ளார்கள்.
பாதிக்கப்பட்ட சிறுவனுக்கு கவுன்சிலிங் கொடுக்கப்பட்டு மருத்துவ பரிசோதனையும் செய்யப்பட்டது. மருத்துவரிடம் இருந்து மருத்துவ சான்றிதழ் பெற்ற பிறகு சிறுவன் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதை போலீசார் உறுதிப்படுத்தினார்கள். இதனையடுத்து போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு பாதிக்கப்பட்ட சிறுவனின் வகுப்பு தோழன் கைது செய்யப்பட்டுள்ளார்.
