இந்தியாவில் பல்வேறு மாநிலங்களிலும் கடந்த சில நாட்களாகவே வரதட்சணை கொடுமையால் இளம்பெண்கள் உயிரை மாய்த்துக் கொள்ளும் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்துவிட்டது. இப்படியான நிலையில் உத்தரபிரதேச மாநிலம் முசாபர் நகர் ரத்தம் புரி பகுதியை சேர்ந்த இளம் பெண் ஹமா(28) என்பவருக்கும் அனஸ் என்ற நபருக்கும் கடந்த 2023 ஆம் ஆண்டு திருமணம் நடந்துள்ளது. திருமணத்திற்கு வரதட்சணையாக பெண்ணின் குடும்பத்தினர் ஒரு லட்சம் ரூபாய் கொடுத்துள்ளனர். இப்படியான நிலையில் திருமணத்திற்குப் பிறகு கூடுதல் வரதட்சனை கேட்டு அந்த பெண்ணை கணவர் மற்றும் குடும்பத்தினர் துன்புறுத்தியுள்ளனர். 5 லட்சம் வரதட்சணை வேண்டும் என்று கூறி கொடுமைப்படுத்தி உள்ளனர்.
இப்படியான நிலையில் 5 லட்சம் ரூபாய் வரதட்சனை கேட்டு அந்த பெண்ணை கணவர், மாமனார், மாமியார் மற்றும் குடும்பத்தினர் மீண்டும் தொல்லை கொடுத்த நிலையில் வரதட்சணை தராததால் அவரை அனைவரும் சேர்ந்து கொடூரமாக தாக்கியுள்ளனர். இந்த தாக்குதலில் படுகாயம் அடைந்த அந்த பெண் வீட்டிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து அனஸ் உட்பட ஐந்து பேரும் தலைமறைவாகிய நிலையில் கொலை குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து இளம் பெண்ணின் உடலை பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனைத் தொடர்ந்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் கொலைக்கு காரணமாக இருந்து அனைவரையும் தேடி வருகின்றனர்.
