தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் நிலையில் அனைத்து கட்சிகளும் தீவிரவாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றன. இந்த முறை எப்படியாவது அதிமுக ஆட்சியை தமிழகத்தில் அமைத்து விட வேண்டும் என்று இபிஎஸ் பாஜகவுடன் கூட்டணி அமைத்து அதற்கான வேலைகளை செய்து கொண்டிருக்கின்றார். மறுபக்கம் மீண்டும் இந்த முறை திமுக ஆட்சி தான் அமைய வேண்டும் என்று ஸ்டாலின் பக்காவாக பிளான் போட்டு வருகின்றார். இவர்களுக்கு நடுவே தமிழகத்திற்கு ஒரு புதிய ஆட்சியை தர வேண்டும் என்பதில் விஜய் உறுதியாக உள்ள நிலையில் தமிழக வெற்றி கழகம் கட்சி நிர்வாகிகளுடன் தொடர்ந்து பயணித்துக் கொண்டிருக்கின்றார்.
இப்படியான நிலையில் தமிழகம் வந்துள்ள மோடியை சந்திக்க நேரம் கேட்டும் ஓபிஎஸ்-க்கு அனுமதி வழங்கப்படவில்லை. ஏற்கனவே அமித்ஷாவும் அவரை புறக்கணித்து விட்டார். இந்நிலையில் பாஜக புறக்கணிப்பை வரப்பிரசாதமாக எடுத்துக்கொண்டு NDA கூட்டணியில் இருந்து வெளியேற வேண்டும் என்று ஓபிஎஸ் ஆதரவாளர்கள் குரல் எழுப்ப தொடங்கிவிட்டன. அதுமட்டுமல்லாமல் விஜய் உடன் இணைந்து 2026 தேர்தலை சந்திக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் முன் வைத்துள்ளனர். இதனால் ஓபிஎஸ் விஜயுடன் கைகோர்ப்பாரா என்ற எதிர்பார்ப்பு தற்போது எழுந்துள்ளது
