நோய்வாய்ப்பட்டு சிரமப்படும் தெரு நாய்களை கருணை கொலை செய்ய தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. பதிவு செய்யப்பட்ட கால்நடை மருத்துவர்கள் மூலம் இந்த கருணை கொலை செய்யப்பட வேண்டும் எனவும், கருணை கொலை செய்யப்படும் நாய்கள் குறித்த ஆவணங்கள் முறையாக பராமரிக்கப்பட வேண்டும் எனவும், கருணை கொலை செய்யப்பட்டதும் முறையாக அடக்கம் செய்யப்பட வேண்டும் எனவும் அரசாணை பிறப்பித்துள்ளது.
