இறந்தவரின் உடலில் மாவை தடவி உயிர்ப்பிக்க முயற்சி… மருத்துவமனை வளாகத்தில் அரங்கேறிய மூட நம்பிக்கை… பீகாரில் அதிர்ச்சி சம்பவம்..!!

By Soundarya on ஆடி 25, 2025

Spread the love

பீகார் மாநிலம் பெகுசராய் மாவட்டத்தில் உள்ள சதார் மருத்துவமனையில் மூடநம்பிக்கை தொடர்பான அதிர்ச்சியூட்டும் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. சுத்திகரிப்பு காவல் நிலைய பகுதியை சேர்ந்த 25 வயதானவர் மணீஷ் குமார். இவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார். வெல்டிங் வேலை செய்து கொண்டிருந்தபோது மின்சார வயரில் சிக்கி விபத்துக்குள்ளான பிறகு அவரை அவருடைய குடும்பத்தினர் தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார்கள்.

ஆனால் மருத்துவர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக அறிவித்தனர்.  ஆனால் குடும்பத்தினர் மருத்துவமனை வளாகத்தில் வைத்து அந்த இளைஞனின் உடலை ஒரு பெஞ்சில் படுக்க வைத்து அவருடைய உடலில் உருட்டு ஊசி மற்றும் மாவுப்பொடி தடவி உயிர்பிக்க முயன்றார்கள். இந்த சம்பவம் குறித்த வீடியோ ஊடகங்களில் வைரல் ஆகி வருகிறது .பழைய மரபுகள் மற்றும் நம்பிக்கையின்படி இந்த செயலை செய்துள்ளார்கள். மருத்துவமனை நிர்வாகத்திற்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று கூறப்படுகிறது .