இனி எவனும் கிட்ட நெருங்க முடியாது… பள்ளி மாணவிகளுக்கு தற்காப்பு கலை பயிற்சி… அசத்தும் தமிழக அரசு…!

By Nanthini on ஆடி 25, 2025

Spread the love

தமிழகத்தில் பள்ளி கல்லூரி மாணவர்களின் நலனுக்காக அரசு சார்பில் ஏராளமான செயல் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதனால் மாணவர்கள் பலரும் பயனடைந்து வருகிறார்கள். இப்படியான நிலையில் மாணவிகளுக்காக தமிழக அரசு ஒரு புதிய திட்டத்தை கொண்டு வந்துள்ளது. அதாவது ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி திட்டத்தின் கீழ் அரசு பள்ளிகளில் ஆறு முதல் 12 ஆம் வகுப்பு வரை படிக்கக்கூடிய மாணவிகளுக்கு தற்காப்பு கலை பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன.

இதற்கு ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மாநிலத் திட்ட இயக்ககம் 15.5 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. பாலத்தில் இரண்டு நாட்கள் வீதம் மூன்று மாதங்களுக்கு 24 பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட வேண்டும். அனைத்து மாணவிகளுக்கும் இந்த தற்காப்பு கலை பயிற்சிகள் வழங்கப்பட வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது