திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி தாலுகாவில் ஒரு கிராமத்தைச் சேர்ந்த 10 வயது சிறுமி தன்னுடைய பாட்டி வீட்டில் தங்கி அந்த பகுதியில் உள்ள நான்காம் வகுப்பு படித்து வருகிறார். இந்த நிலையில் சம்பவத்தன்று பள்ளி முடிந்து திரும்பி வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தபோது சிறுமி தனியாக செல்வதை நோட்டமிட்ட நபர் ஒருவர் சிறுமியின் வாயை கையால் பொத்தி மாந்தோப்புக்குள் தூக்கிச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். பின்னர் அங்கிருந்து தப்பித்த சிறுமி தனக்கு நடந்த சம்பவம் குறித்து உறவினர்களிடம் தெரிவித்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் போலீசில் புகார் அளித்துள்ளார்கள்.
இதனையடுத்து அந்த நபரை தனிப்படை அமைத்து தேடி வருகிறார்கள். இந்நிலையில் சிசிடிவி காட்சியில் பதிவான நபரின் உருவத்தை போல சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் உத்தரபிரதேச இளைஞர் ஒருவர் அனுமதிக்கப்பட்டுள்ளார். மது போதையில் கீழே விழுந்ததாக அனுமதிக்கப்பட்டுள்ளார். சந்தேகத்தின் பேரில் இவரிடம் தற்போது தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.
