கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அடுத்த அஞ்செட்டி அருகே தொட்ட மஞ்சனை கிராமத்தில் வசிப்பவர் மாதேஷ்(35). இவரும் மாதப்பன் என்பவரின் மனைவி நாகம்மாவும் கடந்த 15 நாட்களாக வீட்டை விட்டு வெளியே சென்று உள்ளார்கள். இவர்களை குடும்பத்தினர் பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இது குறித்து இருவருடைய குடும்பத்தினரும் காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில் காவல்துறையினர் தேடி வந்தார்கள். இதனையடுத்து வனப்பகுதியில் அழுகிய நிலையில் மாதேஷின் உடலை காவல்துறையினர் கைப்பற்றி விசாரணை நடத்தினர்.
அதேபோல வேறொரு பகுதியில் அழுகிய நிலையில் நாகம்மாவின் உடலையும் மீட்டார்கள். பின்னர் இருவருடைய உடலையும் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தார்கள். இது தொடர்பான விசாரணையில் நாகம்மாவுக்கும், மாதப்பனுக்கும் தவறான கள்ள தொடர்பு இருந்து வந்துள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு இவர்கள் இருவரும் வனப்பகுதியில் மெய் மறந்து உல்லாசமாக இருந்துள்ளார்கள். மனைவியை காணாமல் வனப்பகுதிக்கு தேடி வந்த மாதப்பன் நேரில் என்ன பார்க்க கூடாதோ அதை பார்த்துள்ளார்.
தன்னுடைய மனைவி நாகம்மாவை கண்டித்துள்ளார். இதனால் கோபித்துக் கொண்டு தாய் வீட்டிற்கு சென்றுள்ளார் நாகம்மா. பிறகு அங்கிருந்து அவர் கடந்த 15 நாட்களுக்கு முன்பு திடீரென்று மாயமாகியுள்ளார். வீட்டை விட்டு சென்ற அவர் வீடு திரும்பவில்லை . இதனையடுத்து வனப்பகுதியில் மரத்தில் சேலையில் மாதேஷ் மற்றும் நாகம்மா இருவரும் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது. இருவரும் தற்கொலை செய்து கொண்டார்களா? அல்லது கொலை செய்யப்பட்டார்களா? என்று காவல்துறை விசாரணை நடத்தி வருகிறார்கள்.
