BREAKING: விஜய் கட்சியுடன் கூட்டணி?… கூடவே சீமானும் வராரு… திமிங்கலத்திற்கு வலை வீசிய இபிஎஸ்…!

By Nanthini on ஆடி 22, 2025

Spread the love

தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தற்போதே தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கிவிட்டது. இந்த முறை எப்படியாவது அதிமுக ஆட்சியை தமிழகத்தில் நிலைநாட்ட வேண்டும் என்ற சிந்தனையில் இபிஎஸ் பாஜகவுடன் கூட்டணி அமைத்துள்ளார். ஆனால் தமிழகத்தில் கூட்டணி ஆட்சிதான் அமையும் என்று பாஜக சொல்லிக் கொண்டிருக்க ஈபிஎஸ் தான்தான் முதல்வர் வேட்பாளர் என மறுபக்கம் சொல்லிக் கொண்டிருக்கிறார். அதேசமயம் கூட்டணி வேண்டுமா, வேண்டாமா என்பதை தாங்கள்தான் முடிவு செய்வோம் என்றும் சமீபத்தில் நடைபெற்ற கூட்டத்தில் தெரிவித்திருந்தார்.

இப்படியான நிலையில் கூட்டணி ஆட்சி என்று பாஜகவினரும் தனித்து ஆட்சி என்று அதிமுகவினரும் கூறி வருகிறார்கள். இப்படியான நிலையில் 2026 ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி வைக்க விஜய் மற்றும் சீமானுக்கு இபிஎஸ் அழைப்பு விடுத்துள்ளார். திமுகவை வீழ்த்த ஒத்த கருத்துடைய கட்சிகள் இணைவது அவசியம் எனவும், ஒத்த கருத்துடைய கட்சிகள் என்றால் நாம் தமிழர் கட்சியை மற்றும் தமிழக வெற்றிக்கழகம் கட்சிக்கு மட்டுமே பொருந்தும் என்றும் தெரிவித்த இபிஎஸ், இதுவரை தமிழக வெற்றி கழகம் கட்சியுடன் நேரடியாக கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தவில்லை என்பதையும் உறுதி செய்துள்ளார்.