கர்நாடக மாநிலம் கலபுரகி புறநகர் யாத்ராமி பகுதியில் உண்டு உறைவிட பள்ளி ஒன்று உள்ளது. இந்த பள்ளியில் தலைமை ஆசிரியராக பணிபுரிந்து வருபவர் விஜயாஸ்ரீ பட்டீல். இவர் பள்ளியில் பணிபுரியும் ஊழியர்களை தனக்கு மசாஜ் செய்ய சொல்வதும், கை கால்களை பிடித்து விடும்படி கூறுவதுமாக இருந்து வந்தார். இதுகுறித்து ஊழியர்கள் புகார் அளித்து வந்தார்கள். விஜயாஸ்ரீ பள்ளியில் உதவியாளராக பணிபுரிந்த ஒரு பெண்ணை மிரட்டி மசாஜ் செய்யும்படி கூறியிருக்கிறார். மேலும் அந்த பெண் முடியாது என்றாலும் தொடர்ந்து மிரட்டி மசாஜ் செய்யுமாறு கூறியிருக்கிறார்.
வேறு வழியில்லாமல் அந்த பெண்ணும் மசாஜ் செய்துள்ளார். இதை பள்ளியில் இருந்த ஒருவர் செல்போனில் வீடியோவாக எடுத்து அதை சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த மாணவ மாணவிகளின் பெற்றோர் கல்வித்துறை அதிகாரிகளுக்கு இந்த வீடியோவை அனுப்பி ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எச்சரித்துள்ளனர். மேலும் தலைமை ஆசிரியைக்கு உதவியாளர் மசாஜ் செய்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி தற்போது சர்ச்சை ஏற்படுத்தி உள்ளது.
