சென்னை அப்போலோவில் உடல்நலக்குறைவால் முதல்வர் ஸ்டாலின் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். முன்னதாக வழக்கமான பரிசோதனைக்காக சென்றதாக தகவல் வெளியானது. இந்நிலையில், இன்று காலையில் வழக்கம்போல நடைபயிற்சியி சென்ற போது ஸ்டாலினுக்கு தலைச்சுற்றல் ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அவருக்கு தேவையான பரிசோதனை நடந்து வருவதாகவும் அப்போலோ மருத்துவ அறிக்கை வெளியிட்டுள்ளது.
மருத்துவமனையில் CM ஸ்டாலினுடன் அவரது மனைவி துர்கா இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில், அவரின் உடல்நலம் குறித்து விசாரிக்க மகன் உதயநிதி ஸ்டாலின் ஹாஸ்பிடலுக்கு நேரில் விரைந்துள்ளார். அங்கு எந்தமாதிரியான சிகிச்சை அளிக்கப்படுகிறது என்பது குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிகிறார்.
