இனி மோசடிக்கு இடமே இல்ல..! பட்டாவில் வருகிறது புதிய மாற்றம்… நிலம் வைத்திருப்போருக்கு குட் நியூஸ்..!!

By Soundarya on ஆடி 19, 2025

Spread the love

தமிழகத்தில் பத்திரப்பதிவுத்துறையில் தொடர்ந்து மக்களின் வசதிக்காக பல புதிய மாற்றங்கள் கொண்டுவரப்பட்டு வருகிறது. இப்படியான நிலையில் இ பட்டாவில் போட்டோவை இணைக்கும் நடைமுறை விரைவில் அமலுக்கு வருகிறது. நில மோசடிகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக இந்த திட்டத்தை கொண்டு வர இருப்பதாக வருவாய்த்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.  ஏற்கனவே நில உரிமையாளரின் போட்டோவை இணைக்க முடிவு செய்துள்ள நிலையில், தற்போது ஆதார் எண்ணையும் சேர்க்கும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.

இந்த புதிய நடைமுறை விரைவில் அமலுக்கு வரவுள்ளது. eservices.tn.gov.in இணையதளத்தில் இ-பட்டாவை டவுன்லோடு செய்து கொள்ளலாம். . eservices.tn.gov.in என்ற இணையதளத்தில் மாவட்டம், வட்டம் மற்றும் கிராமம் போன்ற விவரங்களை குறிப்பிட்டு இ-பட்டாவை டவுன்லோடு செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.