நமக்கு எதுக்கு இந்த வேலை.. கழுத்தளவு தண்ணீரில் ரிஸ்க் எடுத்த பத்திரிக்கையாளர்… அடுத்து நடந்த பயங்கர சம்பவம்.. வைரல் வீடியோ..!

By Nanthini on ஆடி 19, 2025

Spread the love

பாகிஸ்தானில் கழுத்தளவு தண்ணீரில் மைக் பிடித்துக் கொண்டு நேரலை செய்த பத்திரிக்கையாளர் ஒருவர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தானில் கடந்த ஜூன் 26 ஆம் தேதி முதல் கனமழை பெய்து வரும் நிலையில் பல மாகாணங்களில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகின்றது. இந்த வெள்ளத்தில் 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ள நிலையில் 50-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். பஞ்சாப் மாகாணத்தில் மட்டும் 40-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ள நிலையில் 100க்கும் மேற்பட்ட வீடுகள் அடித்து செல்லப்பட்டுள்ளது.

இதில் வெள்ளம் காரணமாக இரவல்பிண்டியில் உள்ள சஹான் அணை உடைந்து இருப்பதால் அங்குள்ள பகுதிகள் மூழ்கின. இப்படியான நிலையில் அங்கு பத்திரிக்கையாளர் ஒருவர் கழுத்தளவு வெள்ளத்தில் இறங்கி மைக் பிடித்துக் கொண்டு நேரலை செய்து கொண்டிருந்தார். அப்போது வந்த வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு அவர் பரிதாபமாக உயிரிழந்தார். தற்போது தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி பலரையும் அதிர வைத்துள்ளது.