“சீனாக்காரன் சீனாக்காரன் தான்யா” உண்மையான ராக்கெட்டுக்கே டப் கொடுக்குதே… வாட்டர் பாட்டிலில் சிறுவர்களின் அசத்தல் கண்டுபிடிப்பு..!!

By Soundarya on ஆடி 19, 2025

Spread the love

சீனாவில் பள்ளி மாணவர்கள் சிலர் கோலா பாட்டில்களை வைத்து ராக்கெட் ஒன்றை செய்து அதை பறக்க விட்ட வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. சிறுவர்களுடைய தொழில்நுட்ப அறிவை மேம்படுத்தும் விதமாக இந்த வீடியோ அமைந்துள்ளது .இன்றைய காலத்தில் சிறுவர்கள் அதிக அளவில் தொழில்நுட்ப அறிவை கொண்டிருக்கிறார்கள் என்றே சொல்லலாம். அந்த வீடியோவில் 2-நிலை நீர் அழுத்தம் பயன்படுத்தி அவர்கள் உருவாக்கிய ராக்கெட் பறக்கிறது.

அது உண்மையான ராக்கெட் போல மேலே செல்ல மேல்பகுதி மெதுவாக பிரிந்து பாராசூட் உதவியுடன் மெதுவாக தரையிறங்குகிறது. சிறுவர்கள் தங்களுடைய வீட்டில் உள்ள பொருட்களை வைத்து இதனை செய்துள்ளார்கள். இதை வைத்துப் பார்த்தால் சீனாவின் எதிர்காலம் எவ்வளவு பிரகாசமாக இருக்க போகிறது என்பதை நமக்கு எடுத்துக்காட்டுகிறது என்று சொல்லலாம்.