தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அனைத்து கட்சிகளும் தீவிரமாக தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வருகின்றன. மீண்டும் ஆட்சியைப் பிடிக்க திமுக ஒரு பக்கம் அதற்கான வேலைகளை செய்து கொண்டிருக்க மறுப்பக்கம் ஈபிஎஸ் அதிமுக ஆட்சியை தமிழகத்தில் கொண்டு வருவதற்கான வேலையை செய்து கொண்டிருக்கிறார். அதிமுகவுடன் கூட்டணி அமைத்துள்ள பாஜக கூட்டணி ஆட்சி தான் தமிழகத்தில் அமையும் என்று உறுதியாக உள்ளது. சமீபத்தில் அதிமுக தமிழக வெற்றி கழகம் கட்சியுடன் கூட்டணி அமைக்கப் போவதாக தகவல் வெளியான நிலையில் அந்தச் செய்தி தான் தற்போது ஹாட் டாப்பிக்காக உள்ளது.
இப்படியான நிலையில் பாஜகவை கழட்டி விட்டு விட்டு தமிழக வெற்றிக்கலகம் கட்சியுடன் கூட்டணி அமைக்க அதிமுக முயல்வதாக செல்வ பெருந்தகை கூறியுள்ளார். அமித்ஷாவின் நிர்பந்தத்தால் அதிமுக மன அழுத்தத்தில் இருப்பதாக கூறியுள்ள அவர், தமிழகத்தில் காலூன்ற நினைக்கும் பாஜகவின் எண்ணம் நடக்காது எனவும் காட்டமாக கூறியுள்ளார். அதே நேரம் எங்கள் கூட்டணி விவகாரத்தில் நீங்கள் தலையிட வேண்டாம் என்று அதிமுகவினர் சோசியல் மீடியாவில் கருத்து கூறி வருகிறார்கள். இதையெல்லாம் பார்க்கும் போது அதிமுக கூட்டணி உடைந்து வேறொரு கட்சியுடன் கூட்டணி சேரும் என கூறப்படுகிறது.
