தமிழக சட்டசபை தேர்தலுக்கு இன்னும் பத்து மாதங்கள் மட்டுமே உள்ள நிலையில் தமிழக தேர்தல் களம் இப்போதே சூடுபிடிக்க தொடங்கிவிட்டது. அரசியல் கட்சிகள் இடையே கூட்டணி பேச்சு வார்த்தை திரைக்குப் பின்னும் முன்னும் நடந்து கொண்டிருக்கிறது. அதனைப் போலவே தமிழக சட்டசபை தேர்தலை சந்திப்பதற்கு நடிகர் விஜயின் தமிழக வெற்றிக்கழகம் தயாராகி வருகின்றது.
இந்த முறை ஆட்சி மாற்றத்தை கொடுக்க வேண்டும் என்பதில் விஜய் உறுதியாக உள்ளார். ஏற்கனவே கட்சியின் முதல் மாநாடு விக்கிரவாண்டியில் மிகப்பிரம்மாண்டமாக நடந்த நிலையில் தற்போது இரண்டாவது மாநாடு ஆகஸ்ட் 25 ஆம் தேதி மதுரையில் நடைபெறும் என அக்கட்சியின் தலைவர் விஜய் அறிவித்துள்ளார். இந்நிலையில் தவெக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் (ஜூலை 20) இல் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் ஜியோ மேப் இணைக்கப்பட்ட புதிய App-ஐ விஜய் அறிமுகம் செய்கிறார்.
அதாவது ஒவ்வொருவரின் வீட்டிற்கும் நேரில் சென்று உறுப்பினர் சேர்கையில் நிர்வாகிகள் ஈடுபட வேண்டும். வேறு இடத்திலிருந்து உறுப்பினர் சேர்க்கை நடத்த முயற்சித்தால் புதிய செயலி ஏற்றுக்கொள்ளாது. மேலும், தவறாக உறுப்பினர் சேர்க்கையை பதிவு செய்திருந்தால், சம்பந்தப்பட்ட நிர்வாகிகள் மீது நடவடிக்கை பாயும் என்று கூறப்படுகிறது.
