சென்னை சேர்ந்தவர் தேவநாதன். 35 வயதான இவருடைய எட்டு மாத பெண் குழந்தை சளி பிரச்சினையால் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் குழந்தையின் பெற்றோர் கற்பூரம், தலைவலி தைலத்தை சேர்த்து குழந்தையின் மூக்கில் தேய்த்துள்ளனர். சிறிது நேரத்தில் குழந்தைக்கு திடீரென்று மூச்சு திணறல் ஏற்பட்டுள்ளது. இதனால் பதறிப் போன பெற்றோர்கள் குழந்தையை அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளார்கள். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி குழந்தை நேற்று அதிகாலையில் பரிதாபமாக உயிரிழந்தது. இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் குழந்தையின் உடலை பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு சேர்த்தார்கள். குழந்தை சளி பிரச்சினையால் இறந்ததா? அல்லது கற்பூரம் மற்றும் தலைவலி தைலத்தை சேர்த்து வைத்ததால் மூச்சு திணறி இறந்ததா? என்பது குறித்து பிரேத பரிசோதனைக்கு பின்னர் தான் தெரியவரும் என்று போலீசார் தெரிவித்து இருந்தார்கள்.
நிலையில் தற்போது பிரேத இந்தபரிசோதனை அறிக்கை வெளியாகி உள்ளது. அதில் குழந்தைக்கு ஏற்கனவே கல்லீரல் மற்றும் சிறுநீரகம் பாதிக்கப்பட்டிருந்ததாகவும் அதன் காரணமாகவே உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது என்று போலீசார் தெரிவித்துள்ளார்கள்.
