போயும் போயும் 75 வயது மூதாட்டியை இப்படியா?.. மாமியார் என்றும் பாராமல் மருமகன் செய்த கொடூரம்.. அதிர்ச்சி சம்பவம்..!

By Nanthini on ஆடி 17, 2025

Spread the love

கோயம்புத்தூர் மாவட்டத்தில் 75 வயது மாமியாரை மது போதையில் மருமகன் பலாத்காரம் செய்ய முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கோயம்புத்தூர் மாவட்டம் கவுண்டம்பாளையம் அருகே 51 வயதான கூலி தொழிலாளி ஒருவர் தன்னுடைய 77 வயது மாமியாரை பலாத்காரம் செய்ய முயன்று உள்ளார். மது போதையில் வீட்டிற்கு வந்த அந்த தொழிலாளி தனியாக தூங்கிக் கொண்டிருந்த தன்னுடைய மாமியாரை பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார். மூதாட்டியின் அலறல் சத்தம் கேட்டுச் சென்ற 22 வயது பேரன், தந்தை என்றும் பார்க்காமல் அவரை சரமாரியாக தாக்கியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து இந்த சம்பவம் தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் வழக்கு பதிவு செய்து தொழிலாளியை கைது செய்துள்ளனர். மது போதையில் மாமியாரை பலாத்காரம் செய்ய முயற்ற இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.