Breaking: “இரண்டு வாரங்களில் பதில் அளிக்க” த.வெ.க தலைவர் விஜய்க்கு சென்னை உயர்நீதிமன்றம் நோட்டீஸ்..!!

By Soundarya on ஆடி 17, 2025

Spread the love

தமிழக வெற்றி கழகம் கட்சி கொடிக்கு எதிரான வழக்கில் கட்சித் தலைவர் விஜய்க்கு சென்னை உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இது தொடர்பாக விஜய் இரண்டு வாரங்களில் பதில் அளிக்க ஹைகோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது. தொண்டை மண்டல சான்றோர் தரும பரிபாலன சபை தலைவர் பச்சையப்பன் வழக்கு தொடர்ந்துள்ளார்.

அதில் சிவப்பு, மஞ்சள் நிறத்தில் தொண்டை மண்டல சான்றோர் தர்ம பரிபாலான சபைக் கொடி உருவாக்க திட்டமிடப்பட்டு தமிழக அரசு பதிவு துறையில் தங்களுடைய சபையின் வர்த்தக முத்திரையாக கடந்த 2023 ஆம் வருடம் நவம்பர் மாதம் பதிவு செய்யப்பட்டு சான்றிதழ் பெற இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. மேலும் தொண்டை மண்டல தர்ம பரிபாலன சபை மட்டுமே இந்த வர்த்தக முத்திரையை பயன்படுத்த உரிமை இருக்கிறது. வேறு யாரும் இதை பயன்படுத்த முடியாது என்று மனுவில் கூறப்பட்டுள்ளது.