தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் விஜயகுமாரின் மகளான வனிதா குறித்த செய்திகள் அடிக்கடி ஊடகங்களில் வளம் வருவது வழக்கம்தான். கடந்த சில வாரங்களாக அவருடைய திரைப்படம் குறித்த பேச்சுக்கள் தான் இணையத்தில் அதிகமாக வைரலாகி வருகிறது. கிட்டத்தட்ட 30 வருடங்களுக்குப் பிறகு வனிதா விஜயகுமார் நாயகியாக நடித்துள்ள மிஸஸ் அண்ட் மிஸ்டர் திரைப்படத்தின் கதை விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது. அதே சமயம் இந்த படத்தில் இளையராஜா இசையமைத்த ராத்திரி, சிவராத்திரி என்ற பாடலை வனிதா பயன்படுத்தியதற்கு இளையராஜா வழக்கு தொடர்ந்து உள்ளார். இந்த விவகாரம் சமீபத்தில் பரபரப்பாக பேசப்பட்டிருந்தது. திரைப்படம் எதிர்பார்த்த அளவுக்கு வசூல் கிடைக்காததால் வனிதா தற்போது ஒரு முடிவை எடுத்துள்ளார்.

இது தொடர்பாக கண்ணீரோடு அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், நான் இந்த படத்திற்கு அதிகமாக கடன் வாங்கி தான் படத்தை எடுத்து முடித்துள்ளேன். எனக்கு பெரிதாக வருமானமும் இல்லை, யாருடைய துணையும் இல்லை, என்னுடைய மகளும் இப்போதுதான் சினிமாத்துறைக்கு வருகிறார். என் மகளிடம் இருந்த கொஞ்சம் பணமும், கொஞ்சம் கடனும் வாங்கி தான் இந்த படத்தை எடுத்தோம். ஆனால் இந்த படம் எதிர்பார்த்த அளவுக்கு திரையரங்குகளில் வசூல் பெறவில்லை. ஓடிடிக்கு கொடுத்தாலும் அது எங்களுடைய கடனை அடைக்காது. அதற்காகத்தான் இப்போது மாற்று ஏற்பாடு செய்ய முடிவெடுத்துள்ளேன். அதாவது என்னுடைய youtube சேனலில் வரும் வெள்ளிக்கிழமை இந்த படத்தை வெளியிடப் போகிறேன்.

அதற்கு என்னுடைய youtube சேனலில் மெம்பராக வேண்டும். அதில் மெம்பர் ஆகிறவர்கள் இந்த படத்தை பார்க்கலாம். மெம்பர் ஆவதற்கு நீங்கள் தியேட்டரில் எவ்வளவு டிக்கெட் வாங்குவதற்கு பணம் கொடுக்கிறீர்களோ அதைவிட குறைவான தொகை தான் கட்ட வேண்டி இருக்கும். அதை நீங்கள் ஒரு முறை கட்டி விட்டால் இந்த படத்தின் மேக்கிங் வீடியோ மட்டுமல்லாமல் பல விஷயங்களையும் நீங்கள் பார்த்துக் கொள்ளலாம். எனக்காக தமிழ்நாட்டு மக்கள் எவ்வளவு சப்போர்ட் பண்ணி இருக்காங்க. இந்த விஷயத்துலயும் அவங்க சப்போர்ட் பண்ணுவாங்க என்று நினைக்கிறேன். தயவுசெய்து எனக்கு இந்த சப்போர்ட் பண்ணுங்க என்று வனிதா கண்ணீரோடு அந்த நேரலையில் பேசியுள்ளார்.
Instagram இல் இந்தப் பதிவைக் காண்க
