மீண்டும் DMK தான்… முன்னேறும் தமிழக வெற்றிக் கழகம்… அப்போ ADMK நிலைமை..? வெளியான கருத்து கணிப்பு..!!

By Soundarya on ஆடி 16, 2025

Spread the love

2026 ஆம் வருடம் தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக அரசியல் கட்சியினர் தீவிர வேலைகளில் ஈடுபட்டு வருகிறார்கள். தேர்தலை முன்னிட்டு “ஓட் வைப்” என்ற அமைப்பு ஆய்வு ஒன்றை நடத்தியுள்ளது. அதில் 37 சதவீதம் பேர் திமுக கூட்டணிக்கு ஆதரவாக வாக்களித்துள்ளார்கள். அதே சமயம் அதிமுக பாஜக கூட்டணியானது 32 சதவீதம் வாக்குகளோடு இரண்டாவது இடத்தில் உள்ளது. நடிகர் விஜய் தலைமையில் தமிழக வெற்றிக் கழகம் கட்சி தற்போது மூன்றாவது கட்சியாக வேகமாக வளர்ந்து வருகிறது.

அதிமுக – பாஜக கூட்டணி 2026 தேர்தலில் முக்கிய பங்கு வகிக்கும் என்பதை பார்க்க முடிகிறது. இதில் நீட் தேர்வு ரத்து, ஹிந்தி மொழி, தமிழ் பெருமை மற்றும் தொகுதி மறு சீரமைப்பு போன்ற உணர்ச்சிகரமான பிரச்சனைகளும் வாக்காளர்களிடையே தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. பிப்ரவரி மாதம் தொடங்கப்பட்டு செப்டம்பர் 2024 பதிவு செய்யப்பட்ட தமிழக வெற்றிக் கழகம் கட்சிக்கு 12 சதவீதம் பேர் ஆதரவு அளித்துள்ளார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.