கேரள மாநிலம் கொல்லத்தைச் சேர்ந்தவர் விபன்சிகா மணியன். 32 வயதான இவர் திருமணம் முடிந்து கணவரோடு ஐக்கிய அரபு அமீரகத்திற்கு சென்று தனது கணவரின் குடும்பத்தினரோடு ஒன்றாக வசித்து வந்துள்ளார். இந்த நிலையில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் விபன்சிகா சடலமாக கிடந்துள்ளார். இது குறித்து தகவல் அறிந்து வந்த காவல் துறையினர் அந்த இடத்தில் இருந்து மலையாளத்தில் எழுதப்பட்ட குறிப்பு ஒன்றை கைப்பற்றியுள்ளார்கள். அதில் மன அழுத்தம் மற்றும் துன்புறுத்தல் குற்றச்சாட்டுகள் இருந்துள்ளது . இதனை தொடர்ந்து விபன்சிகாவின் பெற்றோர் அளித்துள்ள புகாரில் விபன்சிகாவின் கணவர் நிதிஷ் வரதட்சனை கேட்டு தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்துள்ளார்.
விபன்சிகா சிவப்பாக இருந்துள்ளார். நித்திஷும் அவருடைய குடும்பத்தினரும் கருப்பாக இருந்துள்ளார்கள். இதனால் அவள் அழகாக தெரியக்கூடாது என்பதற்காக அவளுடைய முடியை வெட்டி மொட்டை அடித்து உள்ளார்கள். மேலும் நிதிஷுக்கு பல பெண்களோடு தொடர்பு இருந்துள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்ததால் இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் கடந்த சில தினங்களாக விபன்சியா தனியாக வசித்து வந்துள்ளார். ஆனால் நித்திஷ் விவகாரத்தை கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். நிதிஷ் தொடர்ந்து கொடுத்த தொல்லை பொறுக்க முடியாமல் விபன்சிகா தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.
