பிரபல நகைச்சுவை நடிகர் குமரி முத்துவின் கல்லறையில் பொறிக்கப்பட்டுள்ள வாசகம் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகின்றது. குமரிமுத்து என்றாலே நம்முடைய நினைவுக்கு வருவது அவருடைய சிரிப்பு மட்டும்தான். தன்னுடைய சிரிப்பால் மட்டுமே மக்களை சிரிக்க வைப்பது தான் அவருடைய தனித்துவமான திறமை. தனது 14 வயதில் சொந்த ஊரான கன்னியாகுமரியை விட்டு சென்னைக்கு வந்து மேடை நாடகங்களில் நடித்த இவர் பல போராட்டங்களை கடந்து தான் வெள்ளித்திரையில் நடிக்க தொடங்கினார். தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் என நான்கு மொழிகளிலும் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்த ரசிகர்கள் மத்தியில் புகழ்பெற்றவர்.

மாறு கண்களுடன் மிகவும் சாதாரணமான தோற்றத்தை கொண்ட இவர் சினிமாவில் பல இன்னல்களை சந்தித்து தான் பிறகு சாதித்துக் காட்டினார். அழகாக இருப்பவர்களுக்கே என்ற சினிமாவில் வாய்ப்பு இல்லாத நிலையில் அன்று தன்னுடைய திறமையை வைத்துக் கொண்டு மட்டுமே சினிமாவில் கலக்கியவர் தான் குமரிமுத்து. முதன்முதலாக நடிகர் சங்கத்தின் நிர்வாகத்தின் மீது கடுமையான விமர்சனம் செய்தவரும் இவர்தான். அதன் விளைவாக சங்கத்தில் நிரந்தர உறுப்பினர் பதவியில் இருந்த இவர் விலக்கப்பட்டார். இவருடைய கடைசி காலத்தில் மாரடைப்பு ஏற்பட்டு அவரை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
அப்போது மருத்துவர்கள் பரிசோதனை செய்து பார்த்ததில் அவருக்கு நுரையீரல் பிரச்சனை இருப்பது கண்டறியப்பட்டது. ஆனால் அப்போது தான் ஊழியம் செய்ய போக வேண்டும் என்று குமரிமுத்து உறுதியாக இருந்து உள்ளார். மருத்துவர்கள் எவ்வளவு சொல்லியும் கேட்காமல் எப்படியும் இறக்கத்தான் போகிறேன் ஆனால் அதை நமக்கு பிடித்த மாதிரி ஊழியம் செய்துவிட்டு இறந்து விடலாம் என்று கூறி அவர் ஊழியம் செய்துள்ளார். அதன் பிறகு தான் இரண்டு நாளில் அவர் உயிரிழந்து போனார் என அவருடைய மகள் ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.

கடந்த 2016 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் உயிரிழந்த குமரி முத்துவின் கல்லறை வாசகம் பலருடைய கவனத்தையும் ஈர்த்துள்ளது. பொதுவாகவே ஒருவர் இறந்து விட்டால் அவருடைய கல்லறையில் பிறந்த தேதி மற்றும் இறந்த தேதி மட்டும் தான் குறிப்பிடுவார்கள். ஒரு சிலர் ஏதாவது வாசகத்தை எழுதுவார்கள். அதன்படி நடிகர் குமரிமுத்துவின் கல்லறையில், it is the time for the God, to enjoy is laughter (எங்களை தேவையான அளவு சிரிக்க வச்சுட்டாரு, ஆண்டவரே இது உங்க டைம் என்ஜாய் பண்ணுங்க), இவரின் சிரிப்பை கடவுள் என்ஜாய் செய்ய வேண்டிய நேரம் என்று அந்த கல்லறையில் பொறிக்கப்பட்டுள்ளது. தற்போது இதுதான் இணையத்தில் வைரலாகி கொண்டு இருக்கிறது.
