ரயில் என்ஜின் மீது ஏறி நின்று.. சற்று நேரத்தில் சென்னையையே அலறவிட்ட பெண்.. பெரும் பரபரப்பு சம்பவம்..!

By Nanthini on ஆடி 16, 2025

Spread the love

தாம்பரம் ரயில் நிலையத்தில் ரயில் என்ஜின் மீது பெண் ஒருவர் நேற்று இரவு ஏறி நின்ற சம்பவம் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது. சென்னையை அடுத்த தாம்பரம் ரயில் நிலையம் அருகே கிழக்கு மற்றும் மேற்கு தாம்பரம் பகுதியை இணைக்கும் ரயில்வே சுரங்கப்பாதை உள்ளது. இங்குள்ள தண்டவாளத்தில் ரயில்களை கழட்டி இழுத்து செல்ல உதவும் ரயில் எஞ்சின் ஒற்று நேற்று இரவு 9 மணி அளவில் அந்த பகுதியில் நின்று கொண்டிருந்தபோது அதன் மீது திடீரென்று பெண் ஒருவர் நீண்ட நேரமாக நின்று கொண்டிருந்தார்.

இருட்டில் அவர் மின்சாரத்தில் அடிபட்டு இறந்தாரா என்ற சந்தேகத்தில் ஏராளமானோர் அந்த பகுதியில் கூடிய நிலையில் ரயில்வே சுரங்க மேம்பால பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. உடனே இது குறித்து தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த ரயில்வே பாதுகாப்பு படையினர் ரயில் இன்ஜின் மீது ஏறி நின்ற பெண்ணை இழுத்து கீழே கொண்டு வந்தனர். சுமார் 40 வயது மதிக்கத்தக்க அந்த பெண் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? எதற்காக இந்த முடிவை செய்தார் என்பது குறித்து எந்த தகவலும் வெளியாகாத நிலையில் இது தொடர்பாக ரயில்வே பாதுகாப்பு படையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.