அப்படி பண்ணா சட்டசபை பக்கம் கூட வர முடியாது.. விஜய்க்கு மிரட்டல் விடுத்த அமைச்சர் துரைமுருகன்..!

By Nanthini on ஆடி 16, 2025

Spread the love

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் ஓராண்டு மட்டுமே உள்ளதால் தேர்தல் களம் இப்போதே அனல் பறக்க தொடங்கிவிட்டது. 2026 சட்டமன்ற தேர்தலில் பலமுனை போட்டி ஏற்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. திமுக கூட்டணி ஒரு பக்கம் வலுவாக உள்ளது. மற்றொரு பக்கம் எதிர்க்கட்சியான அதிமுக மீண்டும் பாஜகவுடன் கூட்டணி அமைத்துள்ளது. அரசியலுக்கு புதிதாக என்ட்ரி கொடுத்துள்ள நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றி கழகம் தனித்து களமிறங்கவே அதிக வாய்ப்புள்ளதாக தெரிகின்றது. வழக்கம்போல சீமானின் நாம் தமிழர் கட்சி தனித்துப் போட்டியிடவே அதிக வாய்ப்புள்ளது.

இதனிடையே விஜய் தொடர்ந்து திமுக அரசுக்கு எதிராக பல விமர்சனங்களை முன்வைத்து வருகிறார்.. இப்படியான நிலையில் எங்களை ஒழிக்க நினைத்தால் சட்டசபைக்கு கூட வர முடியாது என்று அமைச்சர் துரைமுருகன் விஜய்க்கு மிரட்டல் விடுத்துள்ளார். காட்பாடியில் பேட்டியளித்த அமைச்சர் துரைமுருகன், சீனியர்கள் தான் தூண்கள் என ரஜினி கூறியது பற்றி கேட்டதற்கு ரஜினியிடம் போன் செய்து தான் நன்றி தெரிவித்ததாக கூறினார். பல இடங்களில் பொதுமக்கள் கொடுக்கும் மனுக்கள் காணாமல் போய்விடுகிறது. இதனை தவிர்ப்பதற்காகத்தான் உங்களுடன் ஸ்டாலின் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. விஜய் ஒருவேளை திமுகவை ஒழிக்க நினைத்தால் அவரால் எம்எல்ஏவாக கூட சட்டசபை பக்கம் வர முடியாது என்று துரைமுருகன் விமர்சித்துள்ளார்.