சார்பதிவாளர், உதவி தொழிலாளர் ஆய்வாளர், முதுநிலை வருவாய் ஆய்வாளர் மற்றும் உதவியாளர் உட்பட பல பதவிகளில் 645 பணியிடங்களை நிரப்பும் வகையில் ஒருங்கிணைந்த குரூப் 2 மற்றும் குரூப் 2a தேர்வுக்கான அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி நேற்று வெளியிட்டிருந்தது. இந்த தேர்வு முறையில் தற்போது புதிய மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதாவது டிஎன்பிஎஸ்சி வருடாந்திர தேர்வு அட்டவணையில் குறிப்பிட்டுள்ளபடி சார்பதிவாளர், இளநிலை, வேலைவாய்ப்பு அலுவலர், வனவர், முதுநிலை வருவாய் ஆய்வாளர் மற்றும் உதவியாளர் உள்ளிட்ட பல பதவிகளுக்கு 645 காலி பணியிடங்களை நிரப்பும் வகையில் ஒருங்கிணைந்த குரூப் 2 மற்றும் குரூப் 2a தேர்வுக்கான அறிவிப்பு கடந்த ஜூலை 15ஆம் தேதி வெளியிடப்பட்டிருந்தது.
இதற்கான முதல் நிலை தேர்வு செப்டம்பர் 28ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் ஆகஸ்ட் 23ஆம் தேதி வரை ஆன்லைன் மூலம் தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம். தேர்வு கட்டணத்தை யுபிஐ வசதி மூலமாக செலுத்தலாம். தற்போது அரசு அறிவித்துள்ள காலி பணியிடங்களின் எண்ணிக்கை தோராயமானது தான். அரசு துறைகள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களிடமிருந்து கூடுதல் காலி பணியிடங்கள் பெறப்பட்டால் கலந்தாய்வுக்கு முன்பாக மேலும் பணியிடங்கள் எண்ணிக்கை அதிகரிக்கப்படும் என்றும் தேர்வர்களின் நலனை கருதி குரூப் 2a முதன்மை தேர்வு முறை மாற்றி அமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
