விமானத்தை இயக்கும் பைலட்டின் மாத சம்பளம் மட்டும் இவ்வளவா?… பலரையும் வியக்க வைக்கும் தகவல்..!

By Nanthini on ஆடி 13, 2025

Spread the love

சமீபத்தில் அகமதாபாத்தில் நடந்த ஏர் இந்தியா விமான விபத்து உலக மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அதன் பிறகு விமானம் தொடர்பாகவும் பைலட் பதவி தொடர்பாகவும் இணையத்தில் அதிக அளவிலான விஷயங்கள் தேடப்பட்டு வருகின்றது. அதன்படி விமானிகள் குறித்த சில சுவாரசிய தகவல்களை இந்த பதிவில் பார்க்கலாம். விமானியாக மாறுவதற்கு கல்வி தகுதியுடன் ஏராளமான கடின பயிற்சியையும் மேற்கொள்ள வேண்டியிருக்கும். பைலட் என்பதற்கு அர்த்தம் கட்டுப்பாடுகளை பின்பற்றுபவர் என்பதுதான். விமானத்திலும் கட்டுப்பாட்டுத்தளத்தின் உத்தரவுகளை விமானிகள் பின்பற்ற வேண்டும்.

இதனால்தான் விமானம் மற்றும் ரயிலை இயக்குபவர்களை பைலட் என்ற வார்த்தையை பயன்படுத்தி நாம் அழைக்கின்றோம். யார் இந்தியாவின் போயிங் 787 ரக விமானத்தை போன்ற உயர் ரக விமானங்களை இயக்கும் ஒரு விமானிக்கு மாதம் 8 லட்சம் முதல் 10 லட்சம் ரூபாய் வரை சம்பளம் வழங்கப்படும். இருந்தாலும் பைலட்டின் அனுபவம், அவர் பயணம் செய்த நேரங்களின் எண்ணிக்கை மற்றும் விமான நிறுவனம் உள்ளிட்டவற்றை குறித்து சிறிய அளவில் சம்பளம் மாறுபடலாம். மூத்த விமானிகள் அதிகபட்சமாக 10 லட்சம் ரூபாய் வரை சம்பளம் பெறுகிறார்கள். இது மட்டுமல்லாமல் அவர்களுக்கு பல்வேறு சலுகைகளும் வழங்கப்படுகிறது. அதனைப் போலவே இரவு நேரத்தில் பயணம் செய்தல், கூடுதல் நேரம் விமானத்தை இயக்குதல் போன்ற விஷயங்களை கருத்தில் கொண்டு கூடுதல் சம்பளமும் வழங்கப்படும்.

   

விமானிகளுக்கு வெளிநாட்டில் தங்கி இருக்கக்கூடிய வாய்ப்பு மற்றும் மருத்துவ காப்பீடு என பல சலுகைகள் உள்ளது. விடுமுறை நாட்களில் பணியாற்றினாலும் அதற்கும் தனித்தொகை சம்பளத்தில் வழங்கப்படும். விமானிகள் ஆவதற்கு ஒரு குறிப்பிட்ட பயிற்சி மற்றும் கல்வி தகுதி தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டும். ஒவ்வொரு நாட்டு அரசும் இந்த தேவைகளை வெவ்வேறு விதமாக கொண்டுள்ளது. பயிற்சிகள் முடிவடைந்ததும் விமானிகளின் திறனை பொறுத்து சான்றிதழ் அவர்களுக்கு வழங்கப்படும். விமானிகள் தனி உரிமம் மற்றும் வாகன உரிமம் என இரண்டு வகையான உரிமங்களை பெறலாம். இதில் தனி உரிமம் பெற்றவர்கள் தனி விமானங்களை ஓட்ட அனுமதிக்கப்படுவார்கள். வணிக உரிமம் பெற்றவர்கள் பலரும் பயணிக்க கூடிய விமானங்களை ஓட்ட தகுதி பெற்றவர்கள். குறிப்பாக விமானிகள் விமானத்தை இயக்கும்போது நிலையான பாதுகாப்பு நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும். அவசரகால சூழ்நிலைகளில் விமானத்தை எவ்வாறு பாதுகாப்பாக தர இயக்குவது என்பது குறித்த விதிகளையும் பின்பற்ற வேண்டும்.