கன்னட தொலைக்காட்சியில் வெளியான காமெடி கலாட்டா நிகழ்ச்சி மூலமாக பிரபலமானவர்தான் நடிகை சஞ்சு பசய்யா. இவருடைய மனைவி பல்லவி. இருவரும் சேர்ந்து சில திரைப்படங்களில் நடித்துள்ளனர். இவர்கள் பெலகாவி மாவட்டம் அருகே உள்ள பகுதியில் வசித்து வரும் நிலையில் கடந்த சில மாதங்களாக விஜயநகரை சேர்ந்த மனோஜ் என்ற வாலிபர் நடிகை பல்லவிக்கு இன்ஸ்டாகிராம் மூலமாக ஆபாச குறுந்தகவல் மற்றும் புகைப்படங்களை அனுப்பிவந்துள்ளார். இது தொடர்பாக பல்லவி தன்னுடைய கணவரிடம் கூறிய நிலையில் அதனை கேட்ட அவர் உடனே போலீசில் புகார் அளிக்க மனோஜை கைது செய்தனர். அவர் மீது வழக்கு பதிவு செய்து instagram கணக்கை வைத்து மனோஜை கைது செய்தனர் .
மனோஜ் கைது செய்யப்பட்டதை அறிந்ததும் உடனே காவல் நிலையத்திற்கு விரைந்த நடிகர் சஞ்சீவ் போலீசாரிடம் வழக்கை திரும்ப பெறுவதாகவும் வாலிபரை விடுவிக்கும்படியும் கூறியுள்ளார். இதனை தொடர்ந்து போலீசார் அவரை விடுவித்தனர். பிறகு வாலிபரிடம் பேசிய சஞ்சு இதுபோன்ற ஆபாச குறுந்தகவல் புகைப்படத்தை யாருக்கும் அனுப்பக்கூடாது என்று எச்சரித்து அனுப்பி வைத்தார். மேலும் இந்த வீடியோவை அவர் சமூக வலைத்தளங்களில் வெளியிட்ட நிலையில் தற்போது அந்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. நடிகர் சஞ்சுவின் செயலுக்கு இணையதளத்தில் பலரும் தங்கள் பாராட்டுகளை தெரிவித்து வருகிறார்கள்.
