தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அனைத்து கட்சிகளும் தீவிர அரசியல் பணிகளில் ஈடுபட்டு வருகின்றன. தமிழகத்தில் மீண்டும் ஆட்சியைப் பிடித்து விட வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் ஒரு பக்கம் ஓடிக்கொண்டிருக்க மறுப்பக்கம் இந்த முறை அதிமுக தான் ஆட்சி அமைக்கும் என்று எடப்பாடி பழனிச்சாமி உறுதியாக உள்ளார். இதனால் எடப்பாடி பழனிச்சாமி பாஜகவுடன் கூட்டணி அமைத்துள்ள நிலையில் தற்போது தமிழக முழுவதும் சுற்றுப்பயணம் சென்று கொண்டிருக்கின்றார்.
இதனிடையே தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சி அமைக்கப்படும் என்று அமித்ஷா கூறியது தமிழக அரசியலில் பெரும் விவாத பொருளாக மாறி உள்ளது. இது குறித்த கேள்விக்கு, 2026 சட்டப்பேரவை தேர்தலில் தனி பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று அதிமுகவே ஆட்சி அமைக்கும் என்று எடப்பாடி பழனிச்சாமி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து இபிஎஸ் பேச்சு மூலம் கூட்டணி ஆட்சி கிடையாது என்பது உறுதியாகி உள்ளது
