கர்நாடகாவை சேர்ந்த சின்னத்திரை நடிகை மஞ்சுளா என்ற ஸ்ருதி அம்ருததாரா உள்ளிட்ட சில கன்னட சின்னத்திரை சீரியல்களில் நடித்து வருகின்றார். இவரும் அம்பரீஷ் என்ற நபரும் 20 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில் இந்த தம்பதிகளுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். ஸ்ருதி தனது குடும்பத்துடன் பெங்களூரில் வசித்து வருகின்றார். இதனிடையே கணவன் மனைவியிடையே குடும்ப பிரச்சனை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் கணவருடன் வாழ பிடிக்காமல் சுருதி கடந்த ஏப்ரல் மாதம் பெங்களூருவில் வசித்து வரும் அண்ணன் வீட்டுக்கு சென்றுள்ளார்.
இரண்டு மகள்களையும் அவர் தன்னுடன் அழைத்துச் சென்ற நிலையில் கடந்த ஜூலை மூன்றாம் தேதி அம்பரீஷ் ஸ்ருதி இருவரையும் அவர்களது குடும்பத்தினர் சமாதானப்படுத்தி உள்ளனர். அப்போது மனைவி மற்றும் மகள்களை நன்றாக பார்த்துக் கொள்வதாக அம்பரீஷ் உறுதி அளித்துள்ளார். இதை எடுத்து மீண்டும் கணவர் வீட்டுக்கு மகள்களுடன் சேர்ந்து சென்று ஸ்ருதி வாழ ஆரம்பித்தார். இப்படியான நிலையில் ஸ்ருதியின் நடத்தையில் அம்பரீஷுக்கு சந்தேகம் ஏற்பட்ட நிலையில் இருவருக்கும் இடையே பணப்பிரச்சனையும் இருந்துள்ளது.
நடத்தையில் சந்தேகம் மற்றும் பண பிரச்சனை காரணமாக இருவருக்கும் நேற்று மீண்டும் தகராறு ஏற்பட்ட நிலையில் திடீரென்று ஆத்திரம் அடைந்த அம்பரீஷ் ஸ்ருதியை அடித்து தாக்கியதுடன் கத்தியால் அவரைக் குத்தி கொள்ள முயன்றார். அதிர்வருக்கு பலத்த காயம் ஏற்பட்ட நிலையில் அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில் போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
