ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது கணவருடன் தங்கி திருப்பூரில் உள்ள ஒரு பனியன் கம்பெனியில் வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில், இவர் 4 மாத கர்ப்பிணியாக இருந்த நிலையில், கடந்த பிப்ரவரி மாதம் சொந்த ஊருக்கு ரயிலில் சென்றுகொண்டிருந்தார். அப்போது அந்த கர்ப்பிணி பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வேலூர் மாவட்டம் கே.வி குப்பம் அருகே ஓடும் ரயிலில் இருந்து கீழே தள்ளிவிட்டதில் அந்த பெண்ணின் கரு கலைந்தது .
இந்த வழக்கில் கைதானவர் காமராஜர்(28). இந்நிலையில் இவர் குற்றவாளி என்று திருப்பத்தூர் மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது . இவருக்கான தண்டனை விபரங்கள் வரும் 14ஆம் தேதி அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
