இதோ வந்துட்டாருல்ல..! ‘Mrs & Mr’ படத்தில் அனுமதியில்லாமல் என்னுடைய பாடல் இருக்கு… இளையராஜா உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

By Soundarya on ஆடி 11, 2025

Spread the love

இசைஞானி இளையராஜா தன்னுடைய பாடல்களை வேறு படங்களில் பயன்படுத்தி இருந்தால் அதற்கு நஷ்ட ஈடு கேட்டு வழக்கு தொடுத்து வருகிறார். அந்த வகையில் குட் பேட் அக்லி படத்தில் அவருடைய பாடல்கள் பயன்படுத்தப்பட்டதற்கு ஐந்து கோடி நஷ்ட ஈடு கேட்டு இருந்தார். ஆனால் அந்த பாடல்கள் காப்புரிமை உள்ள இடத்தில் அனுமதி வாங்கி விட்டதாக தயாரிப்பு நிறுவனம் கூறிவிட்டது.

இந்த நிலையில் நடிகை வனிதாவின் Mrs & Mr படத்தில் “ராத்திரி சிவராத்திரி” என்ற தன்னுடைய பாடல் என்றும், தன்னுடைய  அனுமதியில்லாமல் பயன்படுத்தியதாக இசையமைப்பாளர் இளையராஜா வழக்கு தொடர்ந்துள்ளார். சென்னை உயர்நீதிமன்றத்தில் இவ்வழக்கு விசாரணைக்கு வருகிறது.