திமுகவுடன் இணையும் முக்கிய பிரபலம்.. அரசியலில் புதிய திருப்பம்.. செம குஷியில் முதல்வர் ஸ்டாலின்..!

By Nanthini on ஆடி 11, 2025

Spread the love

மல்லை சத்யா மற்றும் துரை வைகோ இடையே இருந்த மோதல் தற்போது வைகோ – மல்லை சத்யா இடையேயான மோதலாக மாறி உள்ளது. பிரபாகரனுக்கு மாத்தையா துரோகம் செய்தது போல் மல்லை சத்யா எனக்கு துரோகம் செய்துவிட்டார் என வைகோ பேசியுள்ளார். இப்படியான நிலையில் வைகோவின் குற்றச்சாட்டுகள் அபத்தமானது எனவும் அதிர்ச்சியை அளிப்பதாகவும் கூறியுள்ள மல்லை சத்யா விரைவில் திமுகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தமிழக அரசியலில் திமுக கூட்டணி என்பது பலமாக உள்ளது. எப்படியாவது இந்த முறையும் ஆட்சியைப் பிடித்து விட வேண்டும் என்பதில் முதல்வர் ஸ்டாலின் தெள்ளத் தெளிவாக உள்ளார்.