குடும்பத்தோடு சென்று புதிய கார் வாங்கிய நடிகர் நகுல்.. இணையத்தை கலக்கும் வீடியோ..!

By Nanthini on ஆடி 10, 2025

Spread the love

தமிழ் சினிமாவில் 90 காலகட்டத்தில் ரசிகர்களால் கொண்டாடப்பட்ட மிகவும் பிரபலமான நடிகை தான் தேவயானி. அன்றைய காலகட்டத்தில் பலரின் கனவு கன்னியாக மாறியவருக்கு முதல் ஹிட் படம் என்றால் அது காதல் கோட்டை திரைப்படம் தான். தமிழை தாண்டி தெலுங்கிலும் இவர் நடித்துள்ள நிலையில் ஹிந்தி மற்றும் அங்காள மொழி திரைப்படங்களிலும் நடித்துள்ளார். இவரின் தம்பி என்று அடையாளத்துடன் சினிமாவில் காலடி எடுத்து வைத்தவர் தான் நடிகர் நகுல். பாய்ஸ் படத்தில் படு குண்டாக காணப்பட்டவர் படங்களில் நடிப்பதற்காக அப்படியே உடல் எடையை குறைத்து ஆள் அடையாளம் தெரியாத அளவிற்கு மாறினார்.

\Nakul joined the Vijay Antony film | விஜய் ஆண்டனி படத்தில் இணைந்த நகுல்

   

ஆனால் இவருக்கு வெற்றி படங்கள் என்று எதுவுமே அமையவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். ஆனாலும் இவர் நடித்த மாசிலாமணி உள்ளிட்ட சில திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் பாராட்டை பெற்றது. அதே சமயம் காதலில் விழுந்தேன் படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமான இவர் பிறகு வல்லினம், தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இறுதியாக இவர் நடிப்பில் 2018 ஆம் ஆண்டு செய் என்ற திரைப்படம் வெளியாகி இருந்தது. நீண்ட இடைவேளைக்குப் பிறகு சுபாஷ் கரன் தயாரிப்பில் உருவான வாஸ்கோடகாமா என்ற திரைப்படத்தில் நகுல் நடித்துள்ளார்.

   

Actor Nakul: அக்காவ கஷ்டப்படுத்தி..சண்டை சச்சரவு வந்து… இப்பதான்..'- நடிகர் நகுல்!

 

அதேசமயம் சமீபத்தில் தேவயானி மகள் போட்டியாளராக இருக்கும் சரிகமப சீசன் 5 நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக நகுல் கலந்து கொண்டிருந்தார். இப்படியான நிலையில் நடிகர் நகுல் தனது குடும்பத்துடன் சென்று புதிய கார் ஒன்றை வாங்கியுள்ளார். Innova Hycross என்ற காரை நகுல் வாங்கியுள்ள நிலையில் அது தொடர்பான வீடியோவை அவர் பகிர்ந்துள்ளார். இதனைத் தொடர்ந்து அவருக்கு ரசிகர்கள் உள்ளிட்ட பலரும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

 

 

Instagram இல் இந்தப் பதிவைக் காண்க

 

Lanson Toyota பதிவைப் பகிர்ந்துள்ளார் (@lanson.toyota)