தமிழ் சினிமா உலகின் நகைச்சுவை நடிகர் கிங் காங். இவரை தெரியாதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். அதுமட்டும் இல்லாமல் இவருடைய உண்மையான பெயர் பாதி பேருக்கு இவருடைய தெரியாது. நடிகர் கிங் காங் உடைய உண்மையான பெயர் ‘சங்கர்’. இவர் தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான நகைச்சுவை நடிகர். ஏன்னா,அந்த அளவிற்கு இவர் மக்களிடையே நல்ல வரவேற்பையும்,பாராட்டையும் பெற்றவர். மேலும், இவர் அதிகமாக காமெடி நடிகர் வைகை புயல் வடிவேலுடன் இணைந்து செய்யும் நகைச்சுவை காட்சிகள் அனைத்தும் பயங்கரமாக இருக்கும். அதுமட்டும் இல்லாமல் சிரித்து சிரித்து வயிறு வலிக்கும் அளவிற்கு இருக்கும்.
நடிகர் கிங் காங் அவர்கள் 1990 கால கட்டங்களில் தமிழ் சினிமா உலகில் பிரபலமான கவுண்டமணி, செந்தில், வடிவேலு போன்ற பல காமெடி நடிகர்களுடன் இணைந்து அசத்தியவர். அதுமட்டும் இல்லாமல் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் நடிப்பில் வெளி வந்து வெற்றி நடை போட்ட ‘அதிசய பிறவி’ என்ற படத்தின் மூலம் தான் நடிகர் கிங் காங் அவர்கள் தமிழ் சினிமா உலகிற்கு அறிமுகமானார். இவருக்கு திருமணமாகி இரண்டு பெண் பிள்ளைகளும், ஒரு மகனும் உள்ளார்கள். இந்நிலையில் இவருடைய மகளின் திருமணத்திற்கு சினிமா பிரபலங்கள் அரசியல் பிரமுகர்கள் பலருக்கும் நேரில் சென்று திருமண பத்திரிக்கை கொடுத்து இருந்தார். இதனையடுத்து தற்போது திருமணம் சிறப்பாக நடந்து முடிந்துள்ளது. மகள் திருமணம் முடிந்ததும் கிங்காங் ஆனந்த கண்ணீர் விட்டுள்ளார். இதுதொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது.
View this post on Instagram
