இன்று (ஜூலை 9) பாரத் பந்த்.. நாடு முழுவதும் எவையெல்லாம் இயங்கும், எவையெல்லாம் இயங்காது?.. இதோ முழு லிஸ்ட்..!

By Nanthini on ஆடி 9, 2025

Spread the love

ஜூலை 9 இன்று நாடு தழுவிய வேலை நிறுத்தத்திற்கு தொழிற்சங்கங்கள் அழைப்பு விடுத்துள்ளன. இன்று வங்கிகள், காப்பீட்டு அலுவலகங்கள், அல்லது தபால் நிலையங்கள் தொடர்பான முக்கியமான பணிகள் உங்களுக்கு இருந்தால் அது என்று தடைப்படும். வங்கி மற்றும் பல பொது சேவைகளை இன்று நாள் முழுவதும் நிறுத்தப்படும். நாடு முழுவதும் உள்ள ஆயிரக்கணக்கான வங்கிகள், காப்பீட்டு நிறுவனங்கள் மற்றும் தபால் நிலையங்கள் மூடப்பட்டிருக்கும். ஏனென்றால் ஊழியர்கள் எதிர்ப்பு தெரிவித்து இன்று வெளிநடப்பு செய்கிறார்கள்.

இந்த பாரத் பந்த் நாட்டின் பெரும் பகுதி பணியாளர்கள் மற்றும் பொதுத்துறை செயல்பாடுகளை பாதிக்கும் என்று கூறப்படுகிறது. இன்று நடைபெறும் நாடு தழுவிய வேலை நிறுத்தத்திற்கு வங்கி, இன்சூரன்ஸ், போக்குவரத்து மற்றும் கல்வி உள்ளிட்ட பல துறைகளை சேர்ந்த பத்துக்கு மேற்பட்ட தொழிற்சங்கங்கள் சார்ந்த சுமார் 25 கோடி பேர் பங்களிக்க உள்ளனர். மத்திய அரசின் தொழிலாளர் விரோத, விவசாயிகள் விரோத, கார்ப்பரேட் ஆதரவு கொள்கைகளை கண்டித்தும் சிறந்த பணி பாதுகாப்பு, சம்பளம் மற்றும் சமூக பாதுகாப்பு ஆகியவற்றை கோரியும் இந்த பந்த் நடைபெறுகிறது.

   

இன்று நடைபெறும் வேலை நிறுத்தத்தால் பொதுத்துறை வங்கிகள், இன்சூரன்ஸ் நிறுவனங்கள், தபால் துறை சேவைகள், சுரங்கங்கள் மற்றும் தொழிற்சாலைகள், சில மாநிலங்களில் போக்குவரத்து சேவைகள், நெடுஞ்சாலை பணிகள், சில அரசுத்துறை அலுவலகங்கள் சேவை பாதிக்கப்படலாம் . அதே நேரம் மருத்துவமனைகள், பார்மசிகள், அவசர சேவைகள், விமானம் மற்றும் மெட்ரோ ரயில் சேவைகள், தனியார் அலுவலகங்கள் மற்றும் கடைகள், பள்ளிகள் மற்றும் கடைகள் செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.