இனி தினமும் காலையில் லெமன் டீ குடிங்க.. மொத்த பிரச்சனைக்கும் ஒத்த தீர்வு.. இவ்வளவு நன்மைகள் இருக்கா..?

By Nanthini on ஆடி 8, 2025

Spread the love

இந்தியாவில் மிகவும் பிரபலமான பானங்களில் ஒன்று தேநீர். இது கிட்டத்தட்ட எல்லா சந்தர்ப்பங்களிலும் ரசிக்கப்படுகிறது. கருப்பு தேநீர், பால் தேனீர், துளசி தேநீர், ஆரோக்கியமான விருப்பங்களில் ஒன்றான எலுமிச்சை தேநீர் உள்ளிட்ட பல வகையான தேனீக்களை இந்தியர்கள் விரும்பி அருந்துகிறார்கள். இதில் எலுமிச்சை தேநீரில் அதிகப்படியான நன்மைகள் நிறைந்துள்ளது. அதாவது லெமன் டீயில் வைட்டமின் சி மற்றும் ஆக்ஸிஜனேற்றிகள் போன்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் உள்ளது. ஒட்டு மொத்த ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும் நச்சு நீக்கும் பண்புகள் கொண்டது.

இது செரிமானத்தை மேம்படுத்தவும், உடல் எடையை குறைக்கவும், சரும ஆரோக்கியத்தை அதிகரிக்கவும், நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்தவும் உதவும் ஒரு ஆரோக்கிய பானம் ஆகும். குளிர்காலங்களில் சூடாகவோ அல்லது கோடையில் ஐஸ் கட்டியாகவோ சாப்பிட விரும்பினால் எலுமிச்சை தேநீர் பல ஆரோக்கிய நன்மைகளை வழங்கும். இதில் உள்ள பொட்டாசியம், மக்னீசியம், துத்தநாகம், தாமிர உள்ளிட்ட நூல் சத்துகள் மூளையை சுறுசுறுப்பாகி மனம் புத்துணர்வு பெறவும் மன அழுத்தம் நீங்கவும் உதவுகின்றது. வளர்ச்சிதை மாற்ற செயல்பாட்டை ஊக்குவிக்கும். கொழுப்பு சேர்வதை தடுத்து எடையை குறைக்கும். உடலின் நச்சுகள் மற்றும் கழிவுகளை நீக்குவதால் நோய்கள் தடுக்கப்படும்.