பெண் ஒருவர் தன்னுடைய தேன் நிலவுக்கு தாயையும் அழைத்துச் சென்றதால் மொத்த வாழ்க்கையும் பறிபோன அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. அதாவது பிரிட்டன் நாட்டை சேர்ந்த லாரன் என்ற பெண்ணின் வாழ்வில் இந்த சோக சம்பவம் நடந்துள்ளது. லாரன் வால் என்ற பெண் தனது 19 வயதில் 2004 ஆம் ஆண்டு பால் வைட் என்ற இளைஞருடன் டேட்டிங் செய்து காதல் உறவில் ஈடுபட்டுள்ளார். இதன் மூலம் இவர்களுக்கு பெண் குழந்தை பிறந்த நிலையில் இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர். அந்தப் பெண்ணின் தாயார் ஜூலி மகளுக்கு பிரம்மாண்டமான முறையில் திருமணம் செய்து வைத்துள்ளார்.
திருமணத்திற்குப் பிறகு ஹனிமூன் செல்ல தம்பதியினர் முடிவு செய்த நிலையில் அப்போது லாரனின் தாயார் தனியாக இருந்தார் என்பதால் அவரையும் உடன் அழைத்துச் செல்லலாம் என்று முடிவு செய்தனர். அங்கு புது ஜோடியுடன் ஜூலியும் ஜாலியாக பார்ட்டி செய்த நிலையில் பார்ட்டிக்கு பிறகு போதையில் மாப்பிள்ளை பால் மற்றும் ஜூலி இடையே தவறுதலாக உடலுறவு நிகழ்ந்து விட்டதாக கூறப்படுகிறது. இந்த விஷயம் மகளுக்கு முதலில் தெரியவில்லை.
சில மாதங்களுக்குப் பிறகு தாய் கர்ப்பமாக இருந்த நிலையில் இந்த செய்தி அவருக்கு அதிர்ச்சியை தந்தது. இந்த கர்ப்பத்திற்கு காரணம் தனது கணவர்தான் என்பது அவருக்கு பெயர் அதிர்ச்சியாக இருந்தது. கடும் பாதிப்புக்கு ஆளான அவர் தனது கணவரிடமிருந்து விவாகரத்தும் பெற்றுவிட்டார். இந்நிலையில் தாய் ஜூலியும் குழந்தையை பெற்றெடுத்த நிலையில் மருமகனும் மாமியாரும் பிறகு திருமணம் செய்து கொண்டனர். இந்த செய்தியை தற்போது இணையத்தில் வெளியாகி பலரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
