கல்வி நிறுவனங்களில் அதை செய்ய விருப்பமில்லை… மாணவர்களை மிஸ் யூஸ் செய்ய மாட்டேன்… சசிகுமார் பளீச் கருத்து..!!

By Soundarya on ஆடி 7, 2025

Spread the love

சுப்ரமணியபுரம் என்ற கல்ட் கிளாசிக் திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவுக்கு இயக்குனராகவும் நடிகராகவும் அறிமுகமானவர் சசிகுமார்.இந்த படத்திற்கு பின்னர் ஈசன் என்ற ஒரே ஒரு படத்தை மட்டுமே இயக்கினார். நாடோடிகள், சுந்தரபாண்டியன் என அவர் நடித்த படங்கள் அடுத்தடுத்து ஹிட்டாக தொடர்ந்து நடிக்க ஆரம்பித்தார். இதன் மூலம் தமிழ் சினிமாவில் ஒரு மினிமம் கியாரண்டி நடிகராக உருவானார். அதன் பின்னர் தொடர்ந்து நடிப்பிலேயே கவனம் செலுத்தி வந்தார். தாரை தப்பட்டை, வெற்றிவேல் ஆகிய படங்களில் நடித்தார். கடைசியாக டூரிஸ்ட் பேமிலி படத்தில் நடித்தார்.

தற்போது பிரீடம் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் இந்த படத்தின் விழாவில் பேசிய சசிகுமார், ” என் படத்தின் இசை வெளியீட்டு விழாவை கல்வி நிறுவனங்களில் நடத்த எனக்கு விருப்பமில்லை. என் படத்தை அங்கே புரொமோஷன் செய்து மாணவர்களை மிஸ் யூஸ் செய்யமாட்டேன்”  என்று கூறியுள்ளார்.