கோயம்புத்தூர் மாவட்டம் கோட்டைபுதூர் பகுதியை சேர்ந்தவர் அப்துல் ஜாபர் (48). இவருக்கு சமீம் நிஷா (45) என்ற மனைவி உள்ள நிலையில் இந்த தம்பதிகளுக்கு ஷாருக்கான் (26) என்ற மகனும் ஒரு மகளும் உள்ளனர். கணவன் மனைவி இருவரும் தனியாக வசித்து வரும் நிலையில் இரண்டு பிள்ளைகளும் பாட்டி வீட்டில் வசித்து வருகிறார்கள்.
இப்படியான நிலையில் சம்பவத்தன்று வீட்டிலிருந்து துர்நாற்றம் வருவதாக ஷாருக்கானுக்கு அக்கம் பக்கத்தினர் தகவல் கொடுத்துள்ளனர். இதனை தொடர்ந்து பதற்றம் அடைந்து அவர் வீட்டிற்கு வந்து பார்த்தபோது தந்தை இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். தாயார் மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் கணவர் இறந்தது கூட தெரியாமல் ஐந்து நாட்கள் பிணத்துடன் வாழ்ந்து வந்துள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
