“டாக்ஸி டிரைவர்கள் தான் குறி” போகும் வழியிலேயே கொலை… 24 வருடங்களாக போலீசுக்கே தண்ணி காட்டிய சீரியல் கில்லர் கைது..!!..

By Soundarya on ஆடி 7, 2025

Spread the love

உத்திரபிரதேசம் மற்றும் உத்தரகாண்ட் மாநிலங்களில் பரபரப்பை ஏற்படுத்திய நான்கு கொலை  வழக்குகளில் முக்கிய குற்றவாளியாக கைது செய்யப்பட்டவர் அஜய் லம்பா. இவர் கடந்த 24 வருடங்களுக்கும் மேலாக காவல்துறையின் பிடியிலிருந்து தப்பித்து வாழ்ந்து வந்த சீரியல் கில்லர். இவர் குற்றங்களை செய்யும் முறை மிகவும் துல்லியமானது. அதாவது தன்னுடைய கூட்டாளிகளோடு உத்தரகாண்ட் செல்வதற்கு ஒரு டாக்சியை வாடகைக்கு எடுத்து வழியில் அவர் டிரைவருக்கு போதை பொருள் கொடுத்து கொன்று விடுவார் . அதன் பிறகு யாரும் கண்டுபிடிக்காத படி உடலை ஒரு தொலைதூரார் பகுதியில் வீசி காரை எடுத்து சென்று விற்றுவிடுவார்.

2001 ஆம் வருடம் இந்த கும்பல் பல ஓட்டுனர்களை இந்த முறையில் தான் கொன்றது. அவருடைய கும்பலை சேர்ந்த மேலும் இருவர் கடந்த காலங்களில் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்கள். 2008 முதல் 2018 வரை 10 வருடங்கள் நேபாளத்தில் தலைமுறைவாக இருந்தார் லம்பா. பிறகு தன்னுடைய குடும்பத்தோடு உத்தரகாண்ட் மாநிலம் டோராடூனுக்கு குடி பெயர்ந்தார். சமீபத்தில் கஞ்சா சப்ளை வழக்கில் சிக்கிய பிறகு இவருடைய உண்மை முகம்  அடையாளம் தெரியவந்தது. இவர் நான்கு கொலை வழக்குகளை எதிர்கொண்டாலும் மேலும் பல குற்றங்களை செய்திருக்கலாம் என்று போலீசார் சந்தேகப்படுகிறார்கள்.